ஒடிசா, ஆந்திரா, மீனவர்கள் வாழ்வாதாரத்தை சூறையாடிய தித்லி புயல்

Forums Communities Fishermen ஒடிசா, ஆந்திரா, மீனவர்கள் வாழ்வாதாரத்தை சூறையாடிய தித்லி புயல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14275
  Kalyanaraman M
  Keymaster

  வங்கக்கடலில்  உருவான  “தித்லி” புயல்  ஒடிசா, ஆந்திரா, இடையே   150 – 164 கி.மீ   வேகத்தில்  சூறாவளியாக  வீசி  ஆந்திரா – ஒடிசா, கடற்கரையில்  வாழும்  விளிம்பு  நிலை  மீனவ  மக்கள்  வாழ்வாதாரங்களை  சூறையாடிய   கோர   சம்பவம்    நிகழ்ந்தேறியுள்ளது

  தமிழகத்திற்கு  கிழக்கே  கடலில்  உருவான  “தித்லி”  புயல்   நகர்ந்து  அதிவேக  புயலாக  மாறி  ஒடிசா  மாநிலத்தின்  கோபால்பூர்,  ஆந்திரா  மாநிலத்தின்  பலசா  இடையே  நேற்று  காலை  4:30 , 5.00 மணி  150 – 164   கி.மீ   வேகத்தில்   படு  பயங்கர   சூறைக்காற்றாக    வீசியது.  இதில்  ஆந்திரா  மாநிலத்தில்   8  பேர்   பலியாகினர்,.   3  மீனவர்களை  காணவில்லை.

  அதிவேக  பயங்கரத்தில்  புயல்  வீசும்  என்று  வானிலை  ஆய்வு  மையம்  எச்சரித்து  இருந்ததால்  ஒடிசா,  ஆந்திரா  மாநில அரசுகள்  அனைத்து  கடற்கரை  மாவட்டங்களிலும்  பல்வேறு முன்னெச்சரிக்கை,  நடவடிக்கைகளை   எடுத்திருந்தனர்.

  ஒடிசா   மாநிலத்தின்   கோபால்பூர்   நகரம்   அதனை  ஒட்டியுள்ள  மீனவ  கிராமங்களான   சனா   அர்ஜிபள்ளி,  படா   அர்ஜிபள்ளி,   ஹரிப்பூர்,  நியூ  பக்சிபள்ளி   புரானபந்தா,   உள்ளிட்ட   பகுதிகளில்   சாதாரண  குடிசை   வீடுகளில்   நெருக்கமாக  வாழ்ந்து  வரும்  மிக  ஏழ்மையான  விளிம்பு  நிலை  மீனவ  மக்கள்  பத்திரமாக  வேறு   பாதுகாப்பான   இடங்களுக்கு  அழைத்து   செல்லப்பட்டனர்.

  ஆந்திர  மாநிலம்  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்  உள்ள  பலசா  நகரம் மற்றும்   அதன்   அருகாமையில்   உள்ள   அந்த   மாவட்ட  மீனவ  கிராம மக்களும்     அகற்றப்பட்டனர்

  ஆனாலும்  இரு  மாவட்ட  மீனவ   மக்களின்   வீடுகள்,  மீன்பிடி  படகுகள்,  வலைகள்,  உபகரணங்கள்  படுவேகமாக   வீசிய   சூறைக்காற்றில்  தூக்கி   வீசப்பட்டு   சேதம்   அடைந்தன.

  கோரத்தாண்டவமாடிய   புயலின்   தாக்குதலுக்குள்ளான  மீனவ  பகுதிகள்   மட்டுமின்றி   அதற்கு அருகாமையில்  வாழும்  ஏழை  விவசாய  மக்களின்   வீடுகள்   பறிக்கப்பட்டு   ஆடுகள்,   மாடுகள்,   செத்து   மடிந்தன.

  ஒடிசாவில்  3 லட்சம்  மக்களும்  ஆந்திராவில்  2 லட்சம்  மக்களும்  வெளியேற்றப்பட்டு  பாதுகாப்பான  இடங்களில்  தங்க  வைக்க  பட்டதால்  உயிர்  சேதம்   அதிகம்   இல்லை   என்றாலும்,   விளிம்பு   நிலை  மீனவ  மக்கள்  விவசாய  கூலி  தொழிலாளர்களின்  வீடுகள், உடமைகள், பல  கோடி     மதிப்பிலானவை  சேதம்  அடைந்து  தற்போது  நிர்கதியாக  நிற்கும்  சூழல்   ஏற்பட்டுள்ளது.

  ஒடிசா  மாநிலம்  கோபால்பூர்  மற்றும்  ஆந்திர மாநில  ஸ்ரீகாகுளம்  மாவட்ட  மீனவ  கிராமங்களில்  பல  முறை  சுற்று  பயணம்  செய்து  அந்த  மக்களின்  நிலைமைகளை  அறிந்த  தேசிய  மீனவர்  பேரவை  தலைவரும்  புதுச்சேரி  முன்னாள்  சட்டமன்ற  உறுப்பினருமான  மா. இளங்கோ  கூறுகையில்  இந்தியாவிலேயே  மிக மிக  மோசமான  புயல்களாலும், சூறைக்காற்றாலும்  ஆண்டுதோறும்    பாதிக்கப்படும்  இப்பகுதி  மீனவ  மக்களின்  வாழ்வியல்  மிகவும்  பரிதாபக்குறியது.

  சரியான  வீடுகள், துணிமணிகள்,   உணவு  இன்றி  மிகவும்  வறுமைக்கோட்டிற்கு  கீழே  வாழும்  மக்கள் புயல்  காலங்களில்  அகதிகளை  போன்ற  வாழ்க்கையே  மேற்கொள்கின்றனர்  என்று  கூறுகிறார்.

  மலைவாழ்   மக்களைப்  போன்ற  அவர்களுடைய  வாழ்க்கை  நிலையை  காணும்   எவருடைய   கண்களிலும்   கண்ணீர்  திரும்புவது  நிச்சயம்    என்கிறார்     அவர்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This