Forums › Communities › Fishermen › சதுப்புநிலத்தில் ரோடு போட்ட நகரமைப்பு குழுமத்துக்கு பசுமை தீர்ப்பாயம் அபராதம்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
அக்டோபர் 12, 2018 at 8:19 மணி #14273
Kalyanaraman M
Keymasterசதுப்பு நிலத்தில் ரோடு அமைத்த மநில அரசின் தொழில் நகரமைப்பு குழுமத்துக்கும் அங்கு கட்டிடம் கட்டிய தொண்டு நிறுவனத்துக்கும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கல்கத்தா மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் பருவகாலங்களில் அப்பகுதி விளிம்பு நிலை மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அப்பகுதி சதுப்பு நிலம் காப்புக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசின் நகரமைப்பு ஆணையம் (Nabadiganta Township Authority) அப்பகுதியை ஆக்கிரமித்து ரோடுகள் அமைத்து அதன் அருகில் ஆன்மிக குரு ரவிசங்கர் அவர்களின், வேதிக் தர்ம சன்ஸ்தான் என்ற அமைப்பின் சார்பில் அறிவு ஆலயம் பெயரில் 60 அடி உயர மூன்று மாடி கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.
சட்ட்டவிரோத சதுப்பு நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அப்பகுதி மீனவர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
1992 ஆம் ஆண்டு கல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பொதுமக்கள் 2016 ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கில் அப்பகுதியில் ரோடு அமைக்கவும் கட்டிடம் கட்டவும் அரசின் நகரமைப்பு குழுமமோ தொண்டு நிறுவன அறக்கட்டளையோ, கிழக்கு கொல்கத்தா சதுப்பு நில மேலாண்மை ஆணையத்திடமிருந்து எந்த அனுமதியையும் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்
அரசு அமைப்பும், அறக்கட்டளையும் கிழக்கு கொல்கத்தா சதுப்பு நில சட்டத்தை மீறியுள்ளதை வழக்கில் பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு முன்பு , தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட 60 அடி கட்டிடத்தையும், சாலையையும் அகற்ற உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவு ஓராண்டாக நிறைவேற்றப்படாது குறித்து டெல்லியில் இருந்து வீடியோ கான்பரென்ஸ் மூலம் விசாரணை நடத்திய கிழக்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் 30 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இல்லையெனில்
ரூ.50 லட்சம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கூடுதலான ஒவ்வொரு நாளுக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், உரிய அரசு அலுவலர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்க வேண்டியிருக்கும் என்றும் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.