நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

Forums Inmathi News நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14267
  Kalyanaraman M
  Keymaster

  நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஊழியர்கள் 35 பேரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானி முன் இன்று விசாரணைக்கு வந்தது..  அப்போது, ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரில் இந்திய தண்டனை சட்டம் 124ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அவர் அளித்த புகாரின்படி, இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500ஆவது பிரிவின் கீழ் அவதூறு வழக்குதானே செய்ய முடியும்? என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

  ஆளுநர் எங்காவது செல்லும்போது அவரை தடுத்தாலோ, பணி செய்யவிடாமல் தடுத்தால் தானே, 124 பொருந்தும் என்றும், இதுகூட காவல்துறைக்கு தெரியாதா? என்றும், நீதிபதி தண்டபாணி கூறினார்.எனவே, காவல்துறையிடம் விளக்கம் பெற்று, பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.

  ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் அளித்த உறுதிமொழியை ஏற்ற நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்கிற வரையில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This