பாஜகவோ மத்திய அரசோ தமிழக அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுத்தது இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அவர் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன் என்ற மு.க.ஸ்டாலின் கேள்வி குறித்து கேட்கப்பட்டது. ஜாமீன் வழங்காதது நீதிமன்றத்தின் முடிவு என்றும், அதில் அரசையோ காவல்துறையையோ கேள்விக்குள்ளாக்க முடியாது என பதிலளித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் தடையாக இருந்துவருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.