ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அடுத்த கோழிப்போர்விளை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 7 ஆம் தேதி பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தார்.
அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.