மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
எந்த ஆவணங்களையும் மத்திய அரசிற்கு அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசுக்கு அவசியமென்றால் 1 மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், இல்லையென்றால் உத்தரவு பிறப்பிக்க 3 மாதங்கள் ஆவதாகவும் நீதிபதிகள் சாடினர்.
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை இன்றே மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.