சவுதி அரேபியாவில் சுடப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர கோரிக்கை

Forums Communities Fishermen சவுதி அரேபியாவில் சுடப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14190
  Kalyanaraman M
  Keymaster

  சவுதி   அரேபியாவில்    தங்கி   கடலில்   மீன்  பிடித்து  கொண்டிருந்த  போது   ஈரான்   நாட்டு   கடலோர   காவல்படையால்  துப்பாக்கியால்   சுடப்பட்ட   தமிழக   மீனவர்களை  தமிழகத்தில்   சொந்த  ஊருக்கு   அழைத்து   வர  மத்திய  மாநில  அரசுகள்  ஏற்பாடு  செய்ய  வேண்டும்  என  கோரிக்கை   விடப்பட்டுள்ளது.

  தமிழகத்தின்   கன்னியாகுமரி   மாவட்டம்   முட்டம்   கிராமத்திலிருந்து  சவுதி   அரேபியா   சென்று   அங்குள்ள   மீன்பிடி  கம்பெனியில்  வேலை  பார்த்து   வந்த   மீனவர்கள்   ஸ்மைலின்  (வயது 34)  விஜயன்  (33)   விவேக்  (27)   ஆகியோர்   கடந்த  செப்டம்பர்   30 ஆம்  தேதி   சவுதி  அரேபியா  கடலில்  மீன்பிடித்துவிட்டு   அக்டோபர்  2 ஆம் தேதி  கரை  திரும்பிக்கொண்டிருந்தபோது    கடல்    எல்லை   தாண்டியதாக  குற்றம் சாட்டி    ஈரான்  நாட்டு  கடலோர  காவல்   படையினர்   துப்பாக்கியால்   சுட்டனர்.

  இந்த   துப்பாக்கி   சூட்டில்   ஸ்மைலின்   படுகாயம்   அடைந்தனர்.

  மூன்று    மீனவர்களையும்   வளைத்து    பிடித்த    ஈரான்    கடல்   படையினர்   அவர்களை    தடுப்பு   காவலில்   வைத்தனர்.

  மீனவர்  ஸ்மைலின்  ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை  அளிக்கப்பட்டு   வருகிறது.    மற்றவர்களும்   சிகிச்சை   பெற்றனர்.

  இந்த   நிலையில்   மீனவர்களுக்கு   போதிய,   தேவையான  சிகிச்சை  அங்கு  கிடைக்காது  என்று  கருதும்,   அவருடைய  குடும்பத்தினரும்  கன்னியாகுமரி   மாவட்ட   மீனவர்களும்  அந்த   மீனவர்களை  ஈரானிலிருந்து  மீட்டு  தமிழகத்தில்  அவர்களின்   சொந்த   ஊருக்கு   கொண்டு  வர  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று  மத்திய  மாநில  அரசுகளுக்கு  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

  இது  குறித்து  தேசிய மீனவர் பேரவை  (National Fisherfolk   Forum)  தலைவரும்,  புதுச்சேரி  முன்னாள்  சட்டமன்ற  உறுப்பினருமான

  மா. இளங்கோ,    தெற்கு     ஆசிய   மீனவர்   கூட்டமைப்பு   பொதுச்செயலாளர்,   குமரி   மாவட்ட    மீனவ   சமுதாய   செயல்பாட்டாளருமான   பாதர்   சர்ச்சில்   ஆசிய    இந்திய   வெளியுறவு   அமைச்சர்   திருமதி   சுஷ்மா    சுவராஜ்,    தமிழக   முதலமைச்சர்   எடப்பாடி   கே.  பழனிசாமி,   மீன்வள  துறை  அமைச்சர்  டி. ஜெயக்குமார்  ஆகியோருக்கு  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

  சவுதியில்    உள்ள   கன்னியாகுமரி    மாவட்ட   மீனவர்களுக்கு    போதிய  மருத்துவ   உதவி   உள்பட   அனைத்து   உதவிகளும்   கிடைக்கவும்   அவர்களை   அங்கிருந்து   மீட்டு    தாயகம்    கொண்டு  வர  சவுதி   அரேபியா  மற்றும்   ஈரான்   நாட்டு  இந்திய   தூதரகத்தின்   மூலம்   மத்திய   இணையமைச்சர்    பொன்    ராதாகிருஷ்ணன்  முயற்சிகள்   மேற்கொண்டு   வருவதாக    அமைச்சரின்   அலுவலக    தகவல்கள்    தெரிவிக்கின்றன

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This