அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாக அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.