சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த்தனர். அ.தி.மு.க.வுக்கு துரோகம் இழைத்தவர்கள் நீக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். டி.டி.வி. அணிக்கு சென்ற சிலரை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகத் அவர்கள் கூறினர்.
புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அவர்கள், சேர்க்கப்படாதவர்கள் கட்சியில் இல்லை என்பது பொருள் என்று கூறினர். சசிகலா நீக்கப்பட்டுவிட்டார் என்று தெரிவித்த அவர்கள், பொதுக்குழு மூலம் நீக்கப்பட்டு அவரிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர் அடிப்படை உறுப்பினரே கிடையாது என்றும் தெரிவித்தனர்.