ஆற்று நீரில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பு: மீனவர்கள் பாதிப்பு

Forums Communities Fishermen ஆற்று நீரில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பு: மீனவர்கள் பாதிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14122
    Inmathi Staff
    Moderator

    நாமக்கல்  மாவட்டம்  மதியம்பட்டி  பகுதியில்  காவிரி  நீர்  கிளை    வாய்க்கால்களில்,   சுற்று  வட்டார  பகுதிகளில்  இயங்கும்  சாயப்பட்டறை    கழிவுகள்  கலக்கப்பட்டதால்,  அப்பகுதி  நீரோட்டத்தில்  நுரை  நுரையாக  கிளம்பி   பல  இடங்களில்  சிறு சிறு  பாலங்களின்  மீது  நுரை  அடைத்துக்கொண்டு   வாகன   ஓட்டிகள்  செல்ல  முடியாத  நிலை  ஏற்பட்டுள்ளது.

    நேற்று  இரவும்,  இன்று  காலையிலும்,  பெருமளவில்  நுரை  பாதிப்பு  ஏற்பட்டதால்  பள்ளி  செல்லும்  மாணவ  மாணவியர்  பாலத்தின்  மீது  சாலையில்  நடந்து  சென்று  பள்ளிக்கூடம்  செல்ல  முடியாத  நிலை  ஏற்பட்டது.

    சாயப்பட்டறை   கழிவுகள்  கலந்ததால்  அப்பகுதியில்  மீன்கள்  செத்து  மிதந்தன.  அங்கு   மீன்பிடித்து   தங்கள்   வாழ்வாதாரத்தை  அமைத்து  கொண்ட  ஏழை, எளிய, சிறு  மீனவர்கள்  மீன் பிடிக்க  இயலாமல்  வருவாயின்றி   பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே  போன்று  மதுரையில்  வைகை  நதியிலும்  கழிவு  நீர்  கலந்து  ஆற்று     நீர்   பாதிக்கப்பட்டுள்ளது. மழை   காலம்  என்பதால்  பொங்கி  வரும் மழை  நீருடன்  சாயப்பட்டறை   கழிவுகள், மற்றும்  தொழிற்சாலை  கழிவுகளையும்  வெளியேற்றி   ஆற்று   நீரில்   கலக்கச் செய்வதாக   கூறப்படுகிறது

    இது  குறித்து  சுற்றுசூழல்  துறை அதிகாரிகள்,  மாசு  கட்டுப்பாட்டு  வாரிய  அதிகாரிகள்  உரிய  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று  மீனவ  சமுதாய தலைவர்களும்  சுற்றுச்சூழல்  ஆர்வலர்களும்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This