சாத்தனூர் அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு கொடுத்ததின் விளைவாக ஏலம் எடுத்த ஆதிக்க சக்திகள் பாரம்பரிய மீனவர்களை தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர்,
மேலும் அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அடாவடி செயலிலும் ஈடுபடுகின்றனர். எனவே சாத்தனூர் அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு
வழங்கியதை ரத்து செய்யவேண்டும், மீன்துறை நிர்வாகமே ஏற்று நடத்தவேண்டும்.
என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னையில் தலைமை செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாரை தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.
அதனை தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மீன்வளத்துறை இயக்குனர் உயர்திரு சமீரான் மற்றும் இணை இயக்குநர் (உள்நாட்டு மீன்வளம் ) உயர்திரு கார்திகேயேன் , தமிழ் நாடு மீன்வளர்ச்சி கழகம் பொது மேலாளரையும் இந்தக் குழுவினர் சந்தித்து பேசினர்.
சந்திப்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் இரா.லோகநாதன் சிஐடியூ திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆர்.பாரி மற்றும் மீன்பிடி தொழிற்சங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் ரவி, மற்றும் அறிவழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்குழுவினரிடம் சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வாழும் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதுகாக்கப்படும் என அமைச்சர் மற்றும் இயக்குனர் அவர்கள் உறுதியளித்தனர்.