சாலையோரம் நடைபாதையில் உள்ளவர்கள் இரவில் குடும்பத்துடன் தங்குவதற்காகச் சென்னையில் 3இடங்களில் தங்குமிடங்கள் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக வீடற்றவர்கள் நாள் அனைத்து நாடுகளிலும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டுச் சாலையோரம் உள்ளவர்களுக்காகப் புதிய தங்குமிடங்கள் உருவாக்குதல் மேம்படுத்துதல் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது சென்னையில் ஏற்கெனவே உள்ள 47 தங்குமிடங்களை விரிவுபடுத்தவும், குடும்பத்துடன் தங்குவதற்கான கட்டடங்கள் கட்ட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கெனவே ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், குழந்தைகள் ஆகியோருக்குத் தனித்தனியே தங்குமிடங்கள் உள்ளன. குடும்பத்துடன் தங்குவதற்காக 3 இடங்களில் ஒவ்வொன்றும் 50 இலட்ச ரூபாய் மதிப்பில் 3 கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.