சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் அதை மீண்டும் கேட்டுப் பெற விண்ணப்பிக்க முடியும்.
நாட்டில் 24கோடியே 50இலட்சம் சமையல் எரிவாயு இணைப்புக்கள் உள்ளன. இவர்களில் 2கோடிப்பேர் சமையல் எரிவாயுக்கான மானியம் பெறவில்லை. ஒருகோடிப்பேர் மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுத்துள்ளனர். சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும் நிலையில் மானியம் வேண்டாம் என விட்டுக் கொடுத்தவர்கள் சிலர் மீண்டும் மானியம் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.
அவர்கள் மீண்டும் மானியம் பெற ஆண்டு வருமானம் பத்து இலட்ச ரூபாய்க்குக் குறைவாக உள்ளதாக அறிவித்துத் தங்கள் எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களையும் அதனுடன் வழங்க வேண்டும்.