சிசிடிவி வருகையால் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். நிகழ்ச்சியின்றில் பேசிய அவர்,”சென்னையில் இரண்டாவது காவல் நிலையமாக செம்பியம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி முழுமையான சிசி டிவி கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி.
சிசி டிவி வருவதற்கு முன் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். சென்னையில் செயின் பறிப்பு , மொபைல் பறிப்பு ஆகியவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சிசிடிவி கேமராக்கள்தான். பாதுகாப்பிற்கான மூலதனம் சிசிடிவி கேமராக்கள். எனவே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும” என வேண்டுகோள் விடுத்தார்.