தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.