இரண்டு புயல்கள் உருவாகியுள்ளதால் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்ய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “டிட்லி” புயல் விரிகுடாவின் மத்திய, மேற்கு, வடக்கு பகுதிகளிலும் வீசக்கூடும் என்பதால் 11 ஆம் தேதி வரை கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரேபிய கடல் பகுதியில் உருவாகியுள்ள “லூபன்” புயல் ஓமன் மற்றும் ஏமன் நோக்கி நகரக்கூடியதாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் கருதி இந்திய மேற்கு கடலோர மீனவர்கள் 14 ஆம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு புயல் காரணமாக பரவலாக கிழக்கு, மேற்கு, கடற்கரை மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் பரவலான மழையும், பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.