மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Forums Communities Fishermen மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14102
  Inmathi Staff
  Moderator

   

  இரண்டு  புயல்கள்  உருவாகியுள்ளதால்  கிழக்கு  மற்றும்  மேற்கு  கடற்கரை  மீனவர்கள்  கடலில்  மீன்  பிடிக்க  செல்ல  வேண்டாம்  என்று  இந்திய  வானிலை  ஆய்ய்வு மையம்  மீனவர்களுக்கு  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

  வங்காள   விரிகுடாவில்   உருவாகியுள்ள  “டிட்லி”    புயல்    விரிகுடாவின்    மத்திய,    மேற்கு,    வடக்கு    பகுதிகளிலும்   வீசக்கூடும்   என்பதால்   11  ஆம்    தேதி    வரை    கிழக்கு    கடற்கரை    மீனவர்கள்   கடலில்   மீன்   பிடிக்க  செல்ல   வேண்டாம்   என்று   கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  அரேபிய   கடல்   பகுதியில்   உருவாகியுள்ள  “லூபன்”   புயல்    ஓமன் மற்றும்  ஏமன்    நோக்கி   நகரக்கூடியதாக    இருந்தாலும்   அதனுடைய    தாக்கம்    கருதி    இந்திய    மேற்கு    கடலோர   மீனவர்கள்  14  ஆம்   தேதி   வரை   கடலில்   மீன்   பிடிக்க   செல்ல   வேண்டாம்   என்று   எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

  இரண்டு  புயல்  காரணமாக  பரவலாக  கிழக்கு,  மேற்கு,  கடற்கரை  மாநிலங்களில்  கடலோர  மாவட்டங்களில்  பரவலான  மழையும்,  பல  இடங்களில்   பலத்த   மழை   பெய்யும்   என்றும்   இந்திய  வானிலை  மையம்   தெரிவித்துள்ளது

  வடகிழக்கு   பருவமழை   தொடங்கியுள்ளதால்   தொடர்ச்சியாக   மழை  பெய்ய  வாய்ப்பு   உள்ளதாக  வானிலை  மைய  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This