புதுவையிலிருந்து தாய்லாந்திற்கு விமான சேவை துவக்கம்

Forums Inmathi News புதுவையிலிருந்து தாய்லாந்திற்கு விமான சேவை துவக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14099
    Inmathi Staff
    Moderator

    புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு இன்று விமான சேவை தொடங்கியது.

    லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு ஸ்பைஜெட் நிறுவனம் விமானச் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் வழியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்-கிற்கு தினசரி விமான சேவை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    ஸ்பைஜெட் நிறுவனம் இச்சேவையை வழங்குகிறது. காலை 11.45 மனிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் ஐதராபாத் நகருக்கு மதியம் 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை இரவு 9.40 மணிக்கு சென்றடைகிறது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This