ஆழ்கடலில் 500 மீனவர்கள் சிக்கித் தவிப்பு

Forums Communities Fishermen ஆழ்கடலில் 500 மீனவர்கள் சிக்கித் தவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14062
    Kalyanaraman M
    Keymaster

    கடலில்    புயல்   உருவாகியுள்ளதால்   மீனவர்கள்   மீன்   பிடிக்க  கடலுக்கு   செல்ல   வேண்டாம்   என்று   இன்றுவரை   வானிலை   மையம்  எச்சரித்து   வரும்   சூழலில்   ஏற்கனவே   கடலுக்கு   மீன் பிடிக்க   சென்ற  கன்னியாகுமரி   மாவட்ட   மீனவர்கள்   500   பேர்   ஆழ்கடல்   பகுதியில்  சிக்கியுள்ளனர்.   என்ற   தகவல்   வெளியாகியுள்ளது.

    குமரி  மாவட்டத்தில்  இருந்து  கடந்த  1 ஆம்  தேதி  646  விசைப்படகுகளில்    6,500   மீனவர்கள்   ஆழ்கடல்   மீன்   பிடிப்புக்கு   சென்று  இருந்தனர்.

    புயல் எச்சரிக்கையை  வானிலை  ஆய்வு  மையமும், மீன்  வளத்துறையும்   கடந்த  3 ஆம்   தேதி   வழங்க    தொடங்கியது.

    சரியான   நேரத்தில்   விடுக்கப்பட்ட  எச்சரிக்கை   அறிவிப்பால்   7  ஆம்  தேதி  வரை   514   படகுகள்   பாதுகாப்பாக   கரை   திரும்பியுள்ளன  132  படகுகளில்   86  பேர்   கரை   திரும்பிக்   கொண்டுள்ளனர்.

    மீதியுள்ள  46  படகுகளில்    சென்ற   510  மீனவர்களுக்கு   புயல்  பற்றிய   எச்சரிக்கை   கிடைக்கவில்லை.   இவற்றுள்  42  படகுகள்  பதிவு  செய்யப்பட்டவை.  நான்கு   படகுகள்   பதிவு  செய்யப்படாதவை

    கரை   திரும்பாத   மீனவர்களில்   பெரும்பாலோனோர்  கன்னியாகுமரி  மாவட்டத்தைச்   சேர்ந்தவர்கள்.

    கடந்த  4  நாட்களாக   குமரி    மாவட்டத்தில்   வீடு  வீடாக   கணக்கெடுக்கும்  பணியை   மீனவர்   துறை   மேற்கொண்டுள்ளது.   இந்த  பணி   முடிவடைந்ததும்    எவ்வளவு   மீனவர்கள்   கரை   திரும்பவில்லை  என்ற   முழு   விவரம்   தெரிய   வரும்.

    மேலும் சுமார்  42 படகுகள்  ஓமன்  கடலில்  மீன் பிடித்து  ,கொண்டிருக்கலாம்  என்று  கருதப்படுகிறது.

    ஓமனில்  உள்ள  இந்திய  தூதரகம்  மூலமாக  அங்குள்ள  அந்நாட்டின்  கடலோர   காவல்  படைக்கு   தகவல்  தெரிவிக்கப்பட்டு  தமிழக மீனவர்களுக்கு   புயல்   எச்சரிக்கையை  அறிவிக்க  அரசு  ஏற்பாடு  செய்துள்ளது.

    ஓமன்   நாட்டின்   அருகில்   உள்ள   துறைமுகங்களில்   அந்த  படகுகள்   கரை    சேர   அனுமதிக்கும்படி   கோரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக  மீன்வளத்துறை  உயர்  அதிகாரி  ஒருவர்  இத்தகவல்களை  தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This