ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் இரண்டாவது மீன்களுக்கான மருத்துவமனை

Forums Communities Fishermen ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் இரண்டாவது மீன்களுக்கான மருத்துவமனை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14060
  Kalyanaraman M
  Keymaster

  ஜம்மு  காஷ்மீர்  மாநிலத்தில்  இந்தியாவில்  முதல்முறையாக  மீன்களுக்கு  சிகிச்சை  அளிக்க   மருத்துவமனை   தொடங்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில்  கடற்கரை  மாநில  மீனவர்கள்  பெரும்பாலும்   கடலில்  மீன்பிடித்தாலும்   பிற   26  உள்நாட்டு  மாநில  மீனவர்கள்  தங்கள்  மாநிலத்தில்   ஏரிகள்,  ஆறுகள்,  குளம்,  குட்டை   போன்ற   நீர்நிலையங்களில்  மீன்  பிடித்து   வந்தனர்.

  தற்போது   சில   ஆண்டுகளாக   மீன்    பண்ணைகளை   அமைத்து  வளர்ப்பு   மீன்களை   வளர்த்து   வருகின்றனர்.

  அவ்வாறான   மீன்களுக்கு   அவ்வப்போது   நோய்   தொற்று  ஏற்படுவதும்   அதற்குரிய   மருந்துகளை   தெளிப்பதும்  வழக்கம்.

  பல   சந்தர்ப்பங்களில்   மருந்துகளுக்கு   கட்டுப்படாமல்   மீன்கள் பெருமளவில்   இறந்து   விடுகின்றன.

  அதேபோல்  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில்  உள்ள  பல   மீன்  பண்ணைகளில்   நோய்   தொற்று   மூலமாக   மீன்கள்   கொத்து   கொத்தாக   உயிரிழப்பதாக   ஜம்மு   காஷ்மீர்   மாநில    விவசாய  பல்கலைக்கழகத்துக்கு   தெரிவித்ததை   அடுத்து   அவர்கள்   நடத்திய   ஆய்வில்    குறிப்பிட்டவகை        மீன்கள்   காரணம்   அறிந்து   கொள்ள   முடியாத   நிலையில்  ஏராளமாக   செத்து   மிதந்ததை   அறிந்து   கொண்டனர்

  கடும்   குளிர்   பகுதிகள்   மற்றும்   வெப்ப   பகுதிகள்   போன்ற  நிலைக்கேற்ப   மீன்கள்   இறப்பதற்கான   காரணத்தை   கண்டறிய   விவசாய  பல்கலைக்கழகத்தினர்   தீவிர   ஆராய்ச்சி   செய்துள்ளனர்.

  அதன்   அடிப்படையில்   தற்போது   ஜம்மு   காஷ்மீர்   மாநிலத்தின்   மத்திய   மாவட்டமான   கந்தர்பல்  மாவட்டத்தின்  ரங்கில்  நகரில்  மீன்களுக்கு  சிகிச்சை  அளிப்பதற்கான  ஆஸ்பத்திரி  ஒன்று  தொடங்கப்பட்டுள்ளது.

  நீர்வாழ்  உயிரினங்களுக்கான  மருத்துவ  மேலாண்மை  பிரிவு  இந்த  மருத்துவமனையை  நிறுவியுள்ளது.

  கடந்த  2015  ஆம்   ஆண்டில்   மேற்கு   வங்க   மாநிலத்தில்   மீனவர்களுக்கான  தனி   மருத்துவமனை   நாட்டிலேயே   முதல்   முறையாக   தொடங்கபட்ட    நிலையில்   தற்போது  நாட்டின்   இரண்டாவது  மீன்களுக்கான  மருத்துவமனை  ஜம்மு காஷ்மீரில்  தொடங்கப்பட்டுள்ளது.

  ஜம்மு   காஷ்மீரில்   513  மீன்   விவசாயிகள்   ஆண்டுக்கு   20  ஆயிரம்   டன்   மீன்  உற்பத்தி  செய்து   வருகின்றனர்.

  ஜம்மு  காஷ்மீரில்  நீர்வளம்  மிகுந்துள்ளதால்  மீன்கள்  ஏராளமாக  உற்பத்தி    செய்யபட்டாலும்   ஆண்டுக்கு   30%  சதவீத  மீன்கள்   அதாவது  10  ஆயிரம்  டன்   அளவிலான   மீன்கள்   நோய்     தொற்று   காரணமாக  முழுமையாக   வளர்ச்சி   அடைவதற்கு   முன்பே  அழிந்து  விடுவது  அங்குள்ள  மீன்   உற்பத்தியாளர்கள்,   மீன்  தொழிலாளர்கள்,    மீன்வளத்துறை   அதிகாரிகள்,   ஆராய்ச்ச்சியாளர்கள்   ஆகியோரை   கவலை  அடைய   செய்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This