கடலில் இரண்டு புயல்கள்: வங்காள விரிகுடா,அரபிக்கடலில் புயல் தாக்கும் அபாயம்.

Forums Communities Fishermen கடலில் இரண்டு புயல்கள்: வங்காள விரிகுடா,அரபிக்கடலில் புயல் தாக்கும் அபாயம்.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14058
    Kalyanaraman M
    Keymaster

    வங்காள  விரிகுடாவிலும்,  அரபிக்   கடலிலும்   புயல்கள்  தாக்கும் அபாயம்   ஏற்பட்டுள்ளதால்   இந்தியாவின்   கிழக்கு,  மேற்கு,   கடற்கரை  மாநிலங்களில்   வாழும்   மீனவர்கள்   யாரும்   கடலுக்கு   மீன்பிடிக்க  செல்ல  வேண்டாம்  என்று  இந்திய  வானிலை  நிலையம்  அறிவுறுத்தியுள்ளது.

    கச்சத்தீவு  அருகே   உருவாகிய   காற்றழுத்த  தாழ்வு  மண்டலம்  புயலாக  உருவெடுத்துள்ளது.   லுபன்    என்று   பெயரிட்ட   இந்த   புயல்   கடல்  வழியாக  ஓமன்  நாட்டு   கடலை   நோக்கி   செல்ல   வாய்ப்புள்ளதாக  வானிலை   ஆய்வு    மையம்   கணித்துள்ளது.

    அதே  போல்   அந்தமான்   நிக்கோபார்   தீவுகளுக்கு   கிழக்காக  உருவாகியுள்ள   காற்றழுத்த   தாழ்வு   நிலை   பின்னர்   காற்றழுத்த   தாழ்வு  மண்டலமாகியுள்ளது   இது   புயலாக   மாறி   வடக்கு   ஆந்திரா,  ஒரிசா,  கடல்   பகுதியை   நோக்கி   நகர   வாய்ப்புள்ளது.

    இதனால்   கிழக்கு  கடற்கரை  பகுதியில்   உள்ள   அனைத்து   துறைமுகங்களிலும்   புயல்   எச்சரிக்கை   கூண்டு   ஏற்றப்பட்டுள்ளது.

    இருவேறு  புயல்களால்  கிழக்கு, மேற்கு, கடற்கரைகளில்  உள்ள  அனைத்து  கடற்கரை  மாநில  மீனவர்களும்  கடலுக்கு   மீன்பிடிக்க   செல்ல  வேண்டாம்   என்று   அறிவுருத்தப்   பட்டுள்ளனர்.

    ஒரிசா   மேற்கு   வங்கம்   மற்றும்   வடக்கு   ஆந்திர   மாவட்டங்களுக்கு   ரெட்   அலெர்ட்   அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின்  13 கடற்கரை  மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரி மாநிலத்தின்   புதுச்சேரி,  காரைக்கால்   மாவட்டங்களிலும்  48  மணி  நேரத்துக்கு   மழை   பெய்ய   வாய்ப்புள்ளதாக   வானிலை   மையம்  அறிவித்துள்ளது.

    இந்த   இரண்டு   புயல்களும்   வலுப்பெறும்போது   தமிழகத்தில்   கன  மழை   பெய்ய வாய்ப்புள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This