ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Forums Inmathi News ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14055
    Inmathi Staff
    Moderator

    கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நாளைமுதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கோவை மாவட்டம், ஆழியாறு படுகையின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம்,வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம், சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம், ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலம் ஆகிய பகுதிகளுக்கு அக்டோபர் 10 முதல் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This