நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் விடுவித்த நீதிபதி

Forums Inmathi News நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் விடுவித்த நீதிபதி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14048
    Inmathi Staff
    Moderator

    மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் இன்று காலை புனே செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீஸார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

    அப்போது, நீதிமன்றத்திற்கு வந்த இந்து குழுமத் தலைவர் என்.ராம், 124 வது சட்டப் பிரிவு இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி நீதிபதி நக்கீரன் கோபாலை விடுவித்து உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This