சென்னையில் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்: இரு முதியவர்கள் கைது

Forums Inmathi News சென்னையில் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்: இரு முதியவர்கள் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14024
    Inmathi Staff
    Moderator

    சென்னையில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக இரு முதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவர், தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது போன்றே, திருவேற்காட்டில் ஏழுமலை என்ற 60 வயது முதியவர், புதர் ஒன்றில் பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குழந்தை அலறவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஏழுமலையை தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This