கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பியோடிய நிலையில், ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பீளமேட்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதான செல்வராஜ் என்ற அந்த கைதி, கடந்த 6ஆம் தேதி கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் சிகிச்சை பிரிவில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டான்.
இந்த நிலையில் காலை 5.30 மணியளவில் கழிவறை சென்றவன், ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.