நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
மேல்நிலைக்கல்வி அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் 25 மாணவர்கள் 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்கான படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கிறார்கள் விண்ணப்பங்கள் www.tnjfu.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 15-10-2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் மீன்பதன ஏற்றுமதி தொழிற்சாலைகளில் உற்பத்தி மேற்பார்வையாளர், உற்பத்தி, மேலாளர், மீன்தரக்கட்டுப்பாட்டு மேலாளர், தொழில்நுட்பவியலாளர் தரக்கட்டுப்பாட்டு தொழில் நுட்ப பரிசோதகர் மதிப்பூட்டிய கடல் உணவு பொருள் உற்பத்தி நிறுவன பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர் போன்ற பல வாய்ப்புகள் பெற இயலும்.