டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து சென்றார். இன்று காலை அவர் பிரதமரை சந்தித்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்திற்கான நிதி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கும் கோரிக்கை உள்பட தமிழக பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து பேசியுள்ளார்