அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற ஓரணியில் திரள வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி நாவலூர் பகுதியில் உள்ள மீரான் முஹைதீன் மைதானத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்தியாவின் அரசியமைப்பு சட்டத்தையும், தேசிய கொடியையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் மதித்தது இல்லை என குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றதற்கு காரணம் இஸ்லாமியர்கள் இல்லை, ஆர்.எஸ்.எஸ்.தான் என்றும் அவர் தெரிவித்தார்.