இடைத்தேர்தலை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பயப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதுகுறித்து கூறியதாவது:
இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின், இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை கிடையாது எனக் கூறியுள்ளார்.