சென்னையில், வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை திமுக பொருளாளர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறுகையில், பட்டியலில் இறந்தவர்களின் பெயரில் ஒட்டு விழுவதற்கு யாரோ பின்புலமாக உள்ளனர். 5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், வராத மழைக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. வராத மழைக்கு இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனது அரசியல் அனுபவத்தில் ஏதோ நடக்கிறது.
பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என லோக்சபா தேர்தலுக்கு முன்னர் ஆளுநர்
சூட்சமம் உள்ளது. அண்ணா மற்றும் அம்பேத்கர் பல்கலைகழகத்திற்கு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.