டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கு கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது என கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கரூரில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஓட்டுநர் தேர்வு தளம் போல மாநிலம் முழுவதும் 14 இடங்களில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.