Forums › Communities › Fishermen › மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க மீனவர் பேரவை கோரிக்கை
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
அக்டோபர் 6, 2018 at 8:53 மணி #13859
Inmathi Staff
Moderatorஅதி கன மழை, புயல் அபாயத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளதால், வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைத்து மீனவ மக்களுக்கும் தமிழக, புதுச்சேரி அரசுகள் குடும்பத்துக்கும் தலா ரூ. 5,000/- வீதம் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய மீனவர் பேரவை தலைவரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான மா. இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கப்படுவதற்கு முன்னதாக தற்போது தென் மேற்கு பருவ மழை காலத்தின் இறுதி கட்டமாக மழை பெய்து வருகிறது. இன்றும், இன்னும் இரு தினங்களுக்கும் மிக மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. புயல் உருவாகி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலில் உள்ள மீனவர்களை கரை திரும்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் 89 படகுகளில் ஆழ் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அப்படகுகளில் உள்ள 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இது வரை புயல், மழை பற்றி தகவல் தெரிந்து கொள்ள இயலாமல் அபாய கட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு தகவல் தெரிவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.
மிக கன மழை மற்றும் புயல் தொடங்குவதற்கு முன்னர் அந்த மீனவர்கள் கரை திரும்ப ஹெலிகாப்டர் மூலம் உரிய நடவடிக்கைகளை கடலோர காவல் படையும் கப்பல் படையும் போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். 30 நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்கும் கன்னியாகுமாரி மீனவர்கள் வானிலை மையத்தின் புயல் அபாய “ரெட் அலெர்ட்” விடுக்கப்படுவதற்கு முன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் அபாயம் அறியாமல் ஆழ்கடலில் தங்கியுள்ளனர் என்பதால் போர்க்கால நடவடிக்கை அவசியமாகிறது. தற்போது குறைந்த பட்சம் 10 நாட்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல இயலாக நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் உடனடி வாழ்வாதாரத்திற்கு உதவிட ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் ரூ.5,000/- வழங்க வேண்டும் என்று தமிழக, புதுச்சேரி அரசுகளை தேசிய மீனவர் பேரவை சார்பில் கேட்டு கொள்கிறோம்.
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.