முதலமைச்சரின் ஒப்புதலோடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நூலகங்கள் அமைத்துத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.