மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களை திரட்டி வருவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடைய பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சுரப்பா குறிப்பிட்டார்.
விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், துணைவேந்தராக தான் பொறுப்பேற்ற பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருப்பதாக சுரப்பா கூறினார்.