நாமக்கல் மாவட்டம் சர்க்கார் மணப்பள்ளி கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளுக்கு தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருகில் வனப்பகுதியோ, மயானமோ இல்லை என தவறான தகவலை கூறி மணல் குவாரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் வனப் பகுதி, மயானம் உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மணல் எடுப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. விசாரணையின் போது இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு 3 வாரங்களில் பதிலளிக்க பொதுப்பணித்துறை, வருவாய் வட்டாட்சியர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.