கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது இந்தியாவிலேயே முதல்முறை என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கோப்புகளிலும் உடனடியாக கையெழுத்திட்டு விடுவதால், பணிகள் அனைத்தும் துரித கதியில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.