ஈரோடு மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் தாலூக்காவில் கடந்த வாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததால் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து நீர் நிலைப் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.