திமுகவின் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்ய உத்தரவு

Forums Inmathi News திமுகவின் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்ய உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13784
    Inmathi Staff
    Moderator

    திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு முடிவு செய்ய வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகிற 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள், திமுக பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம், என நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், திமுக புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அதனை பரிசீலித்து உரிய உத்தரவை காவல்துறையினர் பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், வழக்கை முடித்து வைத்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This