சிலைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் ஷா காலஅவகாசம் கோரிக்கை

Forums Inmathi News சிலைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் ஷா காலஅவகாசம் கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13745
    Inmathi Staff
    Moderator

    சிலைக் கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷாவின் சென்னை சைதாப்பேட்டை வீடு, காஞ்சிபுரம் மாவட்டம் மேல் மருவத்தூர் அருகிலும் படப்பை அருகிலும் உள்ள பண்ணை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது எண்ணற்ற சிலைகள் கைப்பற்றப்பட்டன.

    தொன்மையான சிலைகளை வைத்திருந்தது சட்ட விரோதம் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று நேரில் ஆஜராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று ஆஜரான அவரது வழக்கறிஞர், ரன்வீர்ஷாவின் தந்தை இறந்துவிட்டதாகவும், அது தொடர்பான சடங்குகளை செய்ய வேண்டியிருப்பதால் ஆஜராக வரும் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறும் கோரினார். ஆனால் கால அவகாசம் தர விதிகளில் இடம் இல்லை என்று கோரி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதனை மறுத்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This