பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜேக்டோ ஜியோ அமைப்பினர் இன்று ஒரு நாள் விடுப்புகள் எடுத்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்குப் பதிலாக அடக்குமுறைகளை ஏவி விடுவது, சம்பளத்தைப் பிடிப்பது, கைது செய்வது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல், “திட்டமிட்டு” அவர்களை எல்லாம் வீதியில் இறங்கிப் போராட வைத்து, தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் மனப்பான்மையுடன் அ.தி.மு.க அரசு செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய தலைமைச் செயலாளரோ “சம்பளத்தைப் பிடிப்போம்” என்று கெடுபிடி செய்து மிரட்டுவது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.