வட கிழக்கு பருவ மழை குறித்து வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது பற்றி யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதற்கு தாம் தான் காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறினார்.