ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாதது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகளை 30 முதல் 45 நாட்கள் வரை மட்டுமே சேமித்து வைக்கும் திறன் உள்ளதாகவும் புதிய காட்சிகள் பதிவாகும்போது பழைய பதிவுகள் அழிந்துவிடும் என்றும் அப்போலோவின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனிடம் உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சையின்போது சி.சி.டி.வி. கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டதா எனவும், அவ்வாறானால் அணைக்க உத்தரவிட்டது யார் எனவும் விளக்கமாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பேரில் நாளை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.