பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டைக்கு போக்குவரத்து தொழிலாளிகள் பேரணி

Forums Inmathi News பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டைக்கு போக்குவரத்து தொழிலாளிகள் பேரணி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13676
    Inmathi Staff
    Moderator

    சென்னை பல்லவன் இல்லத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை உடனடியாக வழங்கிடுதல், SETC-யில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சென்னை பல்லவன் சாலையில், போராட்டம் நடத்தி வருகின்றனர்.  LPF, CITU, AITUC, போன்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பினர் சார்பாக, கோட்டை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவித்த நிலையில், சுமார் 2 ஆயிரம் பேர் மழையைப் திரண்டுள்ளனர்.

    இதனையொட்டி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பல்லவன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் பேரிகார்டு போன்ற தடுப்புகளை அமைத்து போலீசார் தயாராக உள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This