முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Forums Inmathi News முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13670
  Inmathi Staff
  Moderator

  கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 535 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

  நேற்று விநாடிக்கு 1,870 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 5 ஆயிரத்து 535 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 129 புள்ளி 10அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This