சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர கருணாஸ் பேரவை செயலருக்கு கடிதம்

Forums Inmathi News சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர கருணாஸ் பேரவை செயலருக்கு கடிதம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13644
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் கொண்டுவருமாறு திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கோரியுள்ளார்.

  இது தொடர்பாகச் சட்டப் பேரவைச் செயலரிடம் அவர் அளித்துள்ள கடிதத்தில், பேரவைத் தலைவர் தனபால் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். பேரவையை நடத்தும்போது கடமையில் இருந்து தவறி ஒருசார்பாக நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தனபாலின் செயல்பாடுகள் அவர் சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை எனத் தெரிவிப்பதாகக் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

  இதனால் தனபாலைச் சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தைப் பேரவையில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பேரவைச் செயலருக்கு அளித்த கடிதத்தின் ஒரு நகலை பேரவைத் தலைவர் தனபாலுக்கும் கருணாஸ் அனுப்பியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This