சிறப்பான மருத்துவ சேவைக்காக தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய அரசின் சார்பில் 17 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தேசிய தர உறுதித் திட்டத்தின்கீழ், சிறந்த மருத்துவ சேவைக்காக மத்திய அரசு கொடுத்த கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, சுகாதாரத்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 6 ஆரம்ப சுகாதார நிலையம், 7 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.