இந்து கோயில்கள் சாத்தான்கள் எனப் பேச்சு: மோகன் சி லாசரஸ் வழக்கு பதிவு

Forums Inmathi News இந்து கோயில்கள் சாத்தான்கள் எனப் பேச்சு: மோகன் சி லாசரஸ் வழக்கு பதிவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13622
  Inmathi Staff
  Moderator

  இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள 11 காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மோகன் சி லாசரஸ், இந்து கோவில்கள் மற்றும் கடவுள்கள் குறித்துப் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடமாக குறிப்பிட்டுப் பேசியுள்ள அவர், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் சாத்தானின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில் சாத்தான் அதிகளவில் கோபுரங்கள் அமைத்து குடிகொண்டிருப்பதாகவும், இத்தனை கோவில்கள் ஏன் என்றும் கூறியிருந்தார்.

  இதே போன்று காஞ்சி சங்கர மடத்திற்கு தாம் சென்றதையும் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு பட்டுச்சேலைகளையும், வேட்டிகளை எரித்து யாகம் செய்யப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.

  இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கருமத்தப்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி தக்கலை, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், கோட்டாறு, சுசீந்தரம், இட்டாமொழி காவல்நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல்நிலையங்களிலும் மோகன் சி லாரசஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This