தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல் விநியோகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கியது.
நீதிமன்ற அறிவுறுத்தல்படி இறக்குமதி செய்யப்பட்ட மணலை, பொதுப்பணித்துறை மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த 21ஆம்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதற்காக பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதிஸ்குமார் முன்னிலையில் இன்று மணல் விநியோகம் துவங்கி உள்ளது. முன்பதிவு செய்திருந்தோர் லாரிகள் மூலம் மணலை பெற்றுச் செல்கின்றனர்.