வியட்நாம் கடலோரக் காவல் படைக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையுடன் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காகச் சென்னைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தியா – வியட்நாம் இடையே கடலோரப் பாதுகாப்புக் குறித்து 2015ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இருநாட்டுக் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் கூட்டாகப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக வியட்நாம் கடலோரக் காவல் படையின் சி.எஸ்.பி.8001 கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. பள்ளி மாணவியரும், கடலோரக் காவல்படையின் இசைக்குழுவினரும் இந்தக் கப்பலை வரவேற்றனர்.
வியாழனன்று கடத்தல் தடுப்பு, கடற் கொள்ளைகள் தடுப்பு, எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுத்தல் ஆகிய பயிற்சிகளில் இரு நாட்டுக் கடலோரக் காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.