தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முழுமையாக எதிர்க்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சரிடம், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு உடன்பாடு செய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தாலும், அதை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகக் ஓபிஎஸ் கூறினார்.
கருணாசுக்கு துணைபோவது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.